உண்ணா நோன்பு (#11437)

* கித்தாப்-இ-அகடாசில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “பருவ முதிர்ச்சியின்(15 வயதில்) ஆரம்பத்திலிருந்து நீ பிரார்த்தனையிலும் உண்ணா நோன்பிலும் ஈடுபட வேண்டுமாய் யாம் கட்டளையிட்டுள்ளோம்; இது உனது தேவரும், உனது முன்னோர்களின் தேவருமாகிய உனது கடவுளால் விதிக்கப்பட்டுள்ளது . . . . பயணி, நோயுற்றோர், கர்ப்பிணி அல்லது குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுபவள் ஆகியோர் நோன்பு நோற்றலால் கட்டுப்படுத்தபடார் . . . . சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு உட்கொள்வதையும் நீர் பருகுவதையும் தவிர்த்திடுங்கள்; கவனமாய் இருங்கள், இல்லையெனில் ஆவல், அதி புனித நூலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இக்கிருபையினை உங்களிடமிருந்து பறித்திடப்போகிறது.”

என் இறைவா, நீர் உமது அன்புக்குரியவர்களை உண்ணா நோன்பைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டுள்ள நாள்களின் முதல் நாள் இதுவே ஆகும். தனக்காகவும், தன் ஆசைக்காகவும் அல்லாது உமது வெஞ்சினத்தின் பயம் காரணமாகவும் அல்லாது, உமது தன்னகத்தின் சாட்சியாகவும் உந்தன் மீதுள்ள அன்பிற்காகவும், உமது நல்விருப்பத்திற்காகவும் நோன்பிருந்து, உமது அதி சிறப்புமிகு நாமங்கள், மாண்புறும் பண்புகள் மீது ஆணையாகவும், உம்மைத் தவிர மற்றெல்லாவற்றின் மீதும் உள்ள அன்பிலிருந்து அவர்களைத் தூய்மைப்படுத்திடுமாறும், உமது வதனமெனும் ஒளிகளின் உதயஸ்தல அண்மை, உமது ஒருமைத்தன்மை எனும் அரியணையின் ஆசனம் ஆகியவற்றுக்கு அவர்களை ஈர்த்திடுமாறும் உம்மைக் கேட்கின்றேன். என் இறைவா, உமது அறிவெனும் ஒளியைக் கொண்டு, அவர்கள் உள்ளங்களை ஒளிபெறச் செய்தும், உமது விருப்பம் எனும் தொடுவானத்திலிருந்து பிரகாசிக்கும் பகல் நட்சத்திரத்தின் கதிர்களால் அவர்களின் முகங்களைப் பொலிவடையவும் செய்திடுவீராக. உமக்கு விருப்பம் தரவல்லவற்றைச் செய்திட நீர் வலிமையுடையவராக இருக்கின்றீர். மனிதர் அனைவரும் உதவி கோரி அழைக்கும், சர்வ மகிமைமிக்கக் கடவுள் உம்மையன்றி வேறிலர். 

என் கடவுளே, உம்மை வெற்றி பெறச் செய்யவும், உமது திருவாக்கினை மேன்மையுறச் செய்யவும் அவர்களுக்கு உதவிடுவீராக. உமது நினைவுகள் மற்றும் புகழ்ச்சி, உமது நிரூபணங்கள், உமது அடையாளங்கள் ஆகிவற்றினால் உலகம் முழுவதையும் அந்தளவுக்கு நிறைந்திடச் செய்வீராக. அதனால் உமது ஊழியர்களிடையே உமது சமயத்தின் கரங்கள் போன்றும் மனுக்குலத்தினிடையே  உமது சமயத்தையும், உமது அடையாளங்களையும் வெளிப்படுத்து-பவர்களாக அவர்கள் ஆகிடக்கூடும். மெய்யாகவே, நீரே சர்வ தாராள குணமுடையவரும், அதி மேன்மையானவரும் , ஆற்றல் மிக்கவரும், வலிமை வாய்ந்தவரும், தயாள குணமுடையவரும் ஆவீர்.

-Bahá'u'lláh
-----------------------

உண்ணா நோன்பு (#11438)

அனைத்தும் அறிந்தவரும் எல்லாம் தெரிந்தவருமான  கடவுளின்  திருநூல்களில் வாக்களிக்கப்பட்டவருமான  அவரது திருநாமத்தின் பேரில்! உமது அரியாசனத்தைச் சுற்றி வலம் வந்து, உமது முன்னிலையை அடைந்த ஊழியர்கள், உண்ணா நோன்பிருந்த அவ்வுண்ணா நோன்பு நாள்கள் வந்துவிட்டன. கூறுங்கள்: நாமங்களின் இறைவனே, விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தவரே! உமதன்பின் காரணமாகவும், உமது நல்விருப்பம் காரணமாகவும் உண்ணா நோன்பிருந்தும், உமது நூல்கள், நிருபங்கள் ஆகியவற்றில் நீர் கட்டளையிட்டுள்ளனவற்றைக் கடைப்பிடித்துமுள்ளோரின் நோன்பை ஏற்றுக்கொள்ளுமாறு சர்வ மகிமையாளர்  எனும் உமது நாமத்தின் பேரால் நான் உம்மை வேண்டிக்கொள்கின்றேன். உமது சமயத்தை உயர்த்துவதற்கும், உமதன்பில் நான் நிலையாக இருப்பதற்கும், அவர்களின் பெயரால் உம்மை வேண்டுகிறேன்; அதனால் உமது படைப்பினங்களின் ஆர்ப்பரிப்பு என் காலடிகளைச் சறுக்கச் செய்திடாதிருக்குமாக. மெய்யாகவே, நீர் விரும்பிடும் எவற்றின் மீதும் அதிகாரம் செலுத்திடவல்லவர் நீரே. உயிர்ப்பூட்டுபவரும், சர்வ சக்திவாய்ந்தவரும், அதி கொடையாளரும், நாள்களுக்கெல்லாம் ஆதியானவருமான உம்மையன்றி கடவுள் வேறிலர்.

-Bahá'u'lláh
-----------------------

உண்ணா நோன்பு (#11439)

என்  கடவுளே,   உமது  வல்லமைமிக்க  அடையாளம் மூலமாகவும்,  மனிதர்கள் மத்தியில் உமது   அருளின்  வெளிப்பாடு   மூலமாகவும்,  உமது முன்னிலை எனும் நகரின் வாசலிலிருந்து என்னைத் துரத்திவிடாதீர் என்றும், உமது உயிரினங்கள் மத்தியில் உமது அருளின் வெளிப்பாடுகள் மீது நான் வைத்துள்ள நம்பிக்கைகளைக் குலைத்துவிடாதீர் என்றும், நான் உம்மிடம்  மன்றாடுகிறேன். 

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன்  திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும்    உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, உமது கதவின் வாயிற்படியின் அண்மைக்கு மேன்மேலும்  நெருக்கமாக என்னை ஈர்த்திடவும்,  உமது  கருணை   எனும்   நிழலிலிருந்தும், உமது அருட்கொடை எனும் விதானத்திலிருந்தும், என்னை வெகுதூரம்  விலக்கிடாதிருக்கவும் உமது இனிய குரல் மூலமாகவும், உமது மேன்மைமிகு திருவாக்கு மூலமாகவும், நான் உம்மிடம்  மன்றாடுகிறேன். 

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன்  திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும்    உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, உமது  சுடரொளி வீசும் நெற்றியின் பிரகாசம் மூலமாகவும், அதி உயரிய தொடுவானத்தின் மீதிருந்து ஒளி வீசும் உமது திருவதன ஒளியின் பிரகாசம்  மூலமாகவும், உமது ஆடையின் நறுமணத்தைக் கொண்டு என்னை ஈர்த்திடுமாறும், உமது திருவாய்மொழி எனும் நனிசிறந்த  மதுரசத்தை என்னைப் பருகிடவும் செய்திடுவீராக. 

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன்  திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும்    உள்ள னைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

உமது படைப்பெனும் இராஜ்யத்தின் மீது மறைவான அர்த்தங்கள் எனும் கஸ்தூரி மணத்தைப் பொழிந்து, உமது நிருபங்களின் பக்கங்கள் மீது நகர்ந்திடும் உமது அதி மேலான எழுதுகோலைப் போன்று, உமது வதனத்தின் மீது நகர்ந்திடும் உமது கேசம் மூலமாக, உமது சமயத்திற்காகச் சேவையாற்றி, அதனால் நான் பின்தங்கி  விடாமலும், உமது அடையாளங்கள் மீது  ஆட்சேபம் செய்திட்ட, உமது வதனத்திலிருந்து விலகிச் சென்றோரின் கருத்துகளினால் தடுத்திடா-திருக்குமாறும் என்னை உயர்த்திடுமாறு நான் உம்மிடம்  மன்றாடுகிறேன்.  

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன்  திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும்    உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, நாமங்களுக்கெல்லாம் அரசனாக நீர்  ஆக்கியுள்ள எந்தத் திருநாமத்தினால், விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவரும் பரவசம் அடைந்துள்ளனரோ; அத்திருநாமத்தினால் உமது திருவழகு எனும் பகல் நட்சத்திரத்தைக் கண்ணுற என்னை இயலச் செய்தும், உமது திருவாய்மொழி எனும் மதுரசத்தை எனக்கு வழங்கிடவும், நான் உம்மிடம்  மன்றாடுகிறேன்.

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன்  திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும்    உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, அதிவுயரிய சிகரங்கள் மீதுள்ள உமது மாட்சிமை என்னும் திருக்கூடாரம் மூலமாகவும், அதிவுயரிய மலைகள் மீதுள்ள உமது திருவெளிப்பாடெனும் விதானத்தின் மூலமாகவும், உமது  திருவிருப்பம் விரும்பியுள்ளதையும், உமது நோக்கம் வெளிப்படுத்தியுள்ளதையும் செயல்-படுத்துவதற்கு, எனக்கு அருள்கூர்ந்து உதவிடுமாறு நான் உம்மிடம்   மன்றாடுகின்றேன். 

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன்  திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும்    உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, தன்னை வெளிப்படுத்திய அத்தருணமே, அழகெனும் இராஜ்யமே பக்திபரவசத்தால் தலைவணங்கி, அவ்வழகை ரீங்காரமிடும் குரலில் மகிமைப்படுத்திய, நித்தியம் எனும் தொடுவானத்தின் மீது பிரகாசிக்கும் உமது திருவழகின் பேரில், நான் உடைமையாகக் கொண்டிருக்கும் அனைத்திலும் மரித்து, உமக்குரிய  அனைத்திற்காகவும் வாழ்ந்திட எனக்கு அருளுமாறு நான் உம்மிடம்  மன்றாடுகிறேன். 

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன்  திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும்    உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, எந்த நாமத்தின் மூலமாக உமது அன்பர்களின் உள்ளங்கள் ஆட்கொள்ளப்படவும், உலகில் வாழும் அனைவரின் ஆன்மாக்களும் விண்ணில் உயரப் பரந்திடவும் செய்யப்பட்டனவோ, நல்லன்பர் எனும் உமது அந்தத் திருநாமத்தின் வெளிப்பாடு மூலமாக, உமது உயிரினங்களுக்கிடையே உம்மை  நினைவு- கூர்ந்திடவும், உமது மக்களிடையே உம்மைப்  புகழ்ந்திடவும் எனக்கு உதவிடுமாறு நான் உம்மிடம்  மன்றாடுகின்றேன். 

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன்  திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும்    உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, தெய்வீக விருட்சத்தின் சலசலப்பு மூலமாகவும், உமது திருநாமங்கள் எனும் இராஜ்யத்தில் உமது  திருவாய்மொழி தென்றல்களின் முணுமுணுப்பு மூலமாகவும், உமது விருப்பம் வெறுத்திடும் எதனிலிருந்தும் என்னை வெகுதூரம், விலகச் செய்து, உமது அடையாளங்களின் பகல் நட்சத்திரமானவர் மிளிர்ந்திட்ட அந்த ஸ்தானத்திற்கு என்னை உயர்த்திடுமாறு நான் உம்மிடம்  மன்றாடுகின்றேன். 

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன்  திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும்    உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, உமது விருப்பம் எனும் திருவாயிலிருந்து வெளிவந்த அத்தருணமே, சமுத்திரங்கள் பொங்கி எழந்திடவும், காற்று வீசிடவும், நற்கனிகள் வெளிப்படவும், மரங்கள் துளிர்த்து வெளிப்படவும், கடந்தகாலத் தடயங்கள் அனைத்தும் மறைந்திடவும், திரைகள் அனைத்தும் இரண்டாகக் கிழிந்திடவும் செய்திட்ட, உம்மீது பக்திகொண்டோரைக், கட்டுப்படுத்த வியலாதவர் எனும் அவர்களின் பிரபுவின் திருவதனத்தின் ஒளியை நோக்கி விரைந்திடச் செய்த, அந்த அட்சரத்தின் மூலமாக, உமது அறிவெனும் கருவூலங்களுள் ஒளிந்து கிடப்பவற்றையும், உமது விவேகமெனும் களஞ்சியங்களுள் மறைந்துள்ளவற்றையும்  எனக்குத்  தெரிவித்திடு-மாறு நான் உம்மிடம் மன்றாடுகின்றேன். 

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன்  திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும்    உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, உம்மால்  தேர்ந்தெடுக்கப்பட்டோர், உமது அன்புக்குரியோர் ஆகியோரின் கண்களிலிருந்து நித்திரையைத் துரத்திவிட்ட உமது அன்பெனும் தீயின் மூலமாகவும், அதிகாலை வேளையில்  அவர்கள் உம்மை நினைவுகூர்தல், வாழ்த்துதல் ஆகிவற்றின் மூலமாகவும், உமது திருநூலில் நீர் அனுப்பிவைத்தும், உமது திருவிருப்பத்தின் மூலமாக நீர்  வெளிப்படுத்தி-யுள்ளவற்றை அடைந்துள்ளவர்களுள் என்னையும் ஒருவனாகக் கணக்கிடுமாறு, நான் உம்மிடம்  மன்றாடுகின்றேன். 

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன்  திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும்    உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே,  உந்தன்பால் ஈர்க்கப்பட்டோர் உமது ஆணை எனும்  கணைகளைச் சந்திக்க அவர்களைத் தூண்டியும்,  உம் மீது பக்தி கொண்டோரை  உமது  பாதையில் நீர்  எதிரிகளின் வாள்களைச் சந்திக்கச் செய்திட்ட உமது வதனத்தின் ஒளி மூலமாக, உமது அதிமேன்மையான எழுதுகோலைக் கொண்டு, உமது நம்பிக்கைக்குரியோருக்கும், உம்மால்  தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கும் நீர்  எழுதியுள்ள-வற்றை எனக்கும் எழுதிடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகின்றேன். 

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன்  திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும்    உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

என் கடவுளே, எதன் மூலமாக நீர் உமது  அன்பர்கள் குரலுக்கும், உமக்காக  ஏங்குவோர் பெருமூச்சுக்கும், உமது அண்மையை அனுபவிப்போர் அழுகுரலுக்கும், உம்மீது பக்தி கொண்டோர் புலம்பலுக்கும், செவிசாய்த்துள்ளீரோ, உமது அந்தத் திருநாமத்தின் மூலமாகவும், நிறைவேற்றி; எதன் மூலமாகத்  தங்கள்  நம்பிக்கைகளை உம்மீது வைத்தோரின்  விருப்பங்களை நீர்  நிறைவேற்றி, உமது கிருபை, தயை ஆகியவற்றின் வாயிலாக அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்தீரோ அந்தத் திருநாமத்தின் பேராலும்; எதன் மூலமாக மன்னிப்பு எனும் சமுத்திரம் உமது வதனத்தின் முன் பொங்கி எழுந்ததோ, மற்றும் உமது வள்ளன்மை எனும் மேகங்கள் உமது ஊழியர்களின் மீது பொழிந்தனவோ, உமது அந்தத்  திருநாமத்தின் பேரில், உம்பால் திரும்பியும், உம்மால்  விதிக்கப்படுள்ள நோன்பைக் கடைப்பிடித்துமுள்ள ஒவ்வொருவருக்கும், உமது உத்தரவின்றிப் பேசாதிருப்பதும், உமது பாதையிலும், உமது அன்பிலும், அவர்கள் உடைமையாகக் கொண்டிருந்த அனைத்தையும் துறந்திடுவது எனும் சன்மானத்தை வழங்கிடுமாறு நான் உம்மிடம்  மன்றாடுகிறேன்.

என் கடவுளே, உம் மூலமாகவும், உமது அடையாளங்கள் மூலமாகவும், உமது தெளிவான சின்னங்கள் மூலமாகவும், உமது அழகு, உமது கிளைகள் ஆகியவற்றின் பகல் நட்சத்திரத்தின் பிரகாசிக்கும் ஒளி  மூலமாகவும்,  உமது சட்டங்களை உறுதியாகப் பற்றிக்கொண்டும், உமது திருநூலில் அவர்களுக்கு  நீர் ஆணையிட்டுள்ளவற்றைக்  கடைப்பிடித்தோரின் தீயச் செயல்களை இரத்துச்செய்யுமாறும் நான் உம்மிடம்  மன்றாடுகின்றேன். 

என் கடவுளே, அதி புனிதமும், அதி பிரகாசமும், அதி வலிமையும், அதிவுயர்வும், அதி மேன்மையும், அதி பேரொளியுமிக்க உந்தன்  திருநாமத்தை நான் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருப்பதையும்; இவ்வுலகிலும், வருவுலகிலும் உள்ள அனைத்தையும் சார்ந்துள்ள அங்கியின் விளிம்பினைப் பற்றிக் கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.

-Bahá'u'lláh
-----------------------

உண்ணா நோன்பு (#11440)

என் கடவுளே, இவைதாம், உண்ணா நோன்பினைக் கடைப்பிடிக்குமாறு நீர் உமது ஊழியர்களுக்குக் கட்டளையிட்டுள்ள நாள்கள். அதனுடன், நீர், உமது படைப்பினங்களுக்கு வெளிப்படுத்தியுள்ள உமது சட்டங்கள் என்னும் திருநூலின் முன்னுரையை அழகுப்படுத்தி, உமது விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவரின் பார்வையிலும் உமது கட்டளைகளின் கருவூலங்களை அலங்கரித்திடச் செய்தீர். படைப்பினம் அனைத்தின் அறிவையும் உள்ளடக் கியுள்ள, வேறு எவராலும் ஊடுருவ இயலாத, ஒரு விசேஷ பண்பினை இந் நாள்களின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அருளியுள்ளீர். மேலும், நீர், உமது கட்டளை என்னும் நிருபத்திற்கு ஏற்பவும், உமது மாற்றவியலாத தீர்ப்பு எனும் நூல்களுக்கு ஏற்பவும், இப்பண்பிலிருந்து ஒரு பகுதியினை ஒவ்வோர் ஆன்மாவிற்கும் அருளியுள்ளீர். மேலும், மண்ணுலுகிலுள்ள மக்களும் இனங்களுமாகிய மனிதர் ஒவ்வொருவருக்கும், இந் நூல்களிலும் மறை நூல்களிலுமுள்ள ஒவ்வோர் ஏட்டினையும் வழங்கியுள்ளீர். 

ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளரே, உமது கட்டளைகளுக்கேற்ப உமது ஆர்வமிகு அன்பர்களுக்கு ஒவ்வொரு நாளின் அதிகாலையிலும், உமது நினைவு என்னும் கிண்ணத்தை ஒதுக்கி வைத்துள்ளீர்! உமது பல்கூறு விவேகம் என்னும் திராட்சை ரசத்தினால் அவர்களை மயங்கச் செய்து உமது புகழைக் கொண்டாடவும், உமது நற்பண்புகளைப் போற்றிப் புகழவும் உமது முன்னிலையை அணுகி உமது அருட்-கொடையினைப் பெறும் ஆர்வத்திலும் தங்கள் துயிலையும் துறந்துள்ளனர். அவர்களின் கண்கள், உமது அன்புப் பரிவு என்னும் பகலூற்றின்பால் எல்லா வேளைகளிலும் பதிக்கப்பட்டுள்ளன; அவர்களின் முகங்கள் உமது அருட்தூண்டல் என்னும் ஊற்றின்பால் திருப்பப்பட்டுள்ளன. ஆதலின், உமது வள்ளன்மை, அருள் என்னும் விண்ணுலகிற்கு ஏற்ப, உமது கருணை என்னும் மேகங்களிலிருந்து எங்கள் மீதும் அவர்கள் மீதும் பொழிவீராக. 

என் இறைவா, உமது நாமம் போற்றப்படுமாக! உமது படைப்பினங்களின் முகங்களுக்கு முன் உமது அருட்கொடை என்னும் கதவுகளைத் திறந்து, உமது மண்ணுலகில் வாழ்வோர் அனைவர்பாலும், நீர், உமது மென்கருணை என்னும் வாயில்களை அகலத் திறந்துள்ள நேரம் இதுவே. உமது பாதையில் எவரால் இரத்தம் சிந்தப்பட்டதோ, எவர் உந்தன்பால் கொண்ட ஆர்வ மிகுதியினால் உமது படைப்பினம் அனைத்திடமிருந்தும் தங்களைப் பற்றறுத்துக் கொண்டனரோ, எவரின் உடலுறுப்புகள் ஒவ்வொன்றும் உமது அருட்தூண்டலின் இனிய நறுமணங்களினால் அந்தளவு உற்சாகமடைந்ததன் காரணமாக உமது புகழ்பாடி உமது நினைவினால் அதிர்வுற்றதோ, அவர்களின் பெயரால், நான் உம்மை வேண்டிக் கொள்கிறேன், உம்மிடம் உரையாடிய மோஸஸிடம் அன்று எரிந்திடும் புதர் பிரகடனப்படுத்தியதனை ஒவ்வொரு விருட்சமும் கூக்குரலிடச்  செய்திடுமளவு சக்தி பெற்றதானதொரு வெளிப்பாடும் உமது நண்பராகிய முஹம்மதுவின் நாள்களில் கற்கள் உம்மைப் புகழ்ந்துரைத்தது போல் மிகச் சாதாரணமான ஒவ்வொரு கூழாங் கல்லையும் மீண்டும் உமது புகழ்ச்சியினால் ஒலிக்கச் செய்ததொரு வெளிப்பாடுமாகிய இவ் வெளிப்பாட்டினுள் மாற்றவியலாது நீர் கட்டளையிட்டுள்ள பொருள்களை எங்களுக்குக் கொடுக்காதிருந்து விடாதீர். 

என் இறைவா, உம்முடன் தோழமை கொள்ளவும், உம்மை வெளிப்படுத்தியவரான அவருடன் தோழமை கொள்ளவும், நீர் கிருபை கூர்ந்து உதவியவர்கள் இவர்களேயாவர். அவர்களை நீர் உமது நிழலின் கீழ் ஒன்று சேர்த்து உமது அவையினுள் அவர்களை நுழையச் செய்திடும் வரை, உமது விருப்பம் என்னும் காற்றுகள் அவர்களைச் சிதறிச் செல்லுமாறு செய்துள்ளன. இப்பொழுது உமது கருணை என்னும் விதானத்தின் கீழ் இருக்கச் செய்துள்ளதன் காரணமாக அத்தகையதோர் உயரிய ஸ்தானத்திற்குப் பொருத்தமானதனை அடைவதற்கு அவர்களுக்கு உதவிடுவீராக. என் பிரபுவே, உமது அருகிலிருக்கும்  பாக்கியம் பெற்றிருந்தும் உமது வதனத்தை அறிந்து கொள்ளத் தவறி, உம்மைச் சந்தித்தபோதிலும் உமது முன்னிலையை அடையத் தவறியும் உள்ளோரின் எண்ணிக்கையில் அவர்களைச் சேர்த்திடாதீர். 

என் பிரபுவே, இவர்கள்தாம் இவ்வதி மேன்மையான சிறையினில் உம்முடன் பிரவேசித்துள்ள ஊழியர்கள்; அதன் சுவர்களுக்குள்ளே, உமது ஆணை என்னும் நிருபங்களிலும் கட்டளை என்னும் நூல்களிலும் ஆணையிட்டுள்ளதற்கேற்ப, உண்ணா நோன்பினைக் கடைப்பிடித்தவர்கள் இவர்களே. நீர் வெறுத்திடும் அனைத்திலிருந்தும் அவர்களை முற்றாகத் தூய்மைப்படுத்தவல்ல ஒன்றினை அவர்கள்பால் அனுப்பியருள்வீராக; அதனால் அவர்கள் முழுமையாக உந்தன்மீது பக்தி கொண்டவர்களாக உம்மைத் தவிர மற்றெல்லா-வற்றிலிருந்தும் தங்களைப் பற்றறுத்துக் கொள்ளக் கூடும். 

எனவே, என் இறைவா, உமது அருளுக்கு உகந்த வற்றையும் உமது வள்ளன்மைக்குப் பொருந்தியவற்றையும் எங்கள் மீது பொழிவீராக. மேலும், என் இறைவா, உமது நினைவில் நாங்கள் வாழ்ந்திடவும் உமது அன்பில் நாங்கள் மரித்திடவும் எங்களுக்கு உதவி புரிந்து, வரவிருக்கும் உலகங்களில் — உம்மைத் தவிர வேறெவருக்குமே விளங்கிடாத உலகங்களில் — உமது முன்னிலை என்னும் அன்பளிப்பினை எங்களுக்கு அருள்வீராக. எங்களின் பிரபுவும் எல்லா உலகங்களின் பிரபுவும், விண்ணுலகிலுள்ள அனைத்திற்கும் மண்ணு-லகிலுள்ள அனைத்திற்கும் இறைவனானவர் நீரே. 

என் இறைவா, உமது நாள்களில் உமது அன்பர்களுக்கு நேர்ந்துள்ளதை நீர் காண்கின்றீர். உமது ஒளியே எனக்குச் சாட்சி பகர்கின்றது! உமது இராஜ்யம் முழுவதிலும், உமது தேர்ந்தெடுக்கப்-பட்டோரின் ஓலம் எழுப்பப்பட்டுள்ளது. உமது தேசத்தில் சமய நம்பிக்கையற்றோரிடம் சிலர்  சிக்கிக் கொண்டு, உந்தன்பால் நெருங்கு-வதிலிருந்தும், உமது ஒளி என்னும் அரசவையினை அடைவதிலிருந்தும் தடுக்கப்பட்டுள்ளனர். வேறு சிலர், உம்மை அணுக முடிந்தும், உமது வதனத்தைக் கண்ணுறுவதிலிருந்து தடுக்கப்பட்டனர். 

இன்னும் சிலர் அனுமதிக்கப்பட்டனர்; ஆனால், உம்மைக் கண்ணுற வேண்டும், உமது அரசவையினுள் நுழைய வேண்டும் என்ற பேராவலினால்  உமது உயிரினங்களின் கற்பனைகள் என்னும் முகத் திரைகளையும் மனிதர்களிடையே உள்ள கொடுமையாளர்கள் இழைத்திட்டத் தீங்குகளையும் அவர்களுக்கும் உமக்கும் இடையே வந்திட அனுமதித்து விட்டனர். 

என் பிரபுவே, நீர் மற்றெல்லா நேரத்தையும் விஞ்சிடச் செய்த நேரம் இதுவே; அதனையே நீர் உமது படைப்பினங்களுக்கு மத்தியில் அதி சிறப்பு வாய்ந்தோருடன் தொடர்புப்படுத்தியுள்ளீர். என் இறைவா, உமது தானெனும் தன்மையின் மீதும், அவர்கள் சாட்சியாகவும், இவ்வாண்டின்போது உமது அன்பர்களை மேன்மையுறச் செய்வதனை அவர்களுக்கு அருளுமாறு உம்மை வேண்டிக் கொள்கிறேன். மேலும், உமது சக்தி என்னும் பகல் நட்சத்திரத்தினை உமது மகிமை என்னும் தொடுவானத்திற்கு மேலாகப் பொலிவுடன் பிரகாசிக்கச் செய்யக் கூடியதனை, உமது இறைமை  சக்தியால், உலகம் முழுவதையும் ஒளிரச் செய்திடக் கட்டளையிடுவீராக. 

என் பிரபுவே, உமது சமயத்தை வெற்றி பெறச் செய்து, உமது எதிரிகளைத் தாழ்வுறச் செய்வீராக. ஆகவே, இவ்வுலக வாழ்விலும் வருவுலக வாழ்விலும் நன்மை அளிக்கவல்லதனை எங்களுக்கென எழுதி வைப்பீராக. உண்மையாகவே, நீரே, பொருள்களின் இரகசியங்களை அறிந்தவர். என்றும் மன்னிப்பவரும், வள்ளன்மை மிக்கவருமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

-Bahá'u'lláh
-----------------------

உண்ணா நோன்பு (#11441)

பிரபுவே எனதாண்டவரே, புகழொளி உமக்கே  உரியதாகுக! மனிதர்கள் அனைவரையும் உண்ணா நோன்பைக் கடைபிடிக்கும்படி நீர்  கட்டளையிட்டுள்ள நாள்கள் இவையே;  இதன் மூலம், தங்கள் ஆன்மாக்களை  அவர்கள் தூய்மைப்படுத்தி, உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும்  பற்றறுத்திடக் கூடும்; மேலும்,  உமது மாட்சிமை எனும் அரசவைக்குத்  தகுதியுடையதானதும், உமது  ஒருமையெனும் வெளிப்பாட்டின் பீடத்திற்கு  ஏற்புடையதானதும் அவர்களின் இதயங்களிலிருந்து மேலுயர்ந்திடக் கூடும்.  என் பிரபுவே,  இவ்வுண்ணா நோன்பு உயிர்தரும் நீரைக் கொண்ட ஆறாகி, அதற்கு நீர்  வழங்கியுள்ள நற்பண்பை அது வெளிப்படுத்திட அருள்புரிந்திடுவீராக. சர்வ பேரொளிமிக்க  உந்தன்  திருநாமத்தின்பால் திரும்புவதிலிருந்து  அவர்களை உலகின் தீமைகள் தடுத்திட தவறிட, உமது அரசாட்சி, சக்தி, மாட்சிமை, புகழொளி ஆகியவற்றினை நீர்  வழங்கியுள்ள, உமது அவதாரமானவரின் வருகையோடு இணையாக வந்த உமது அதி ஒளிமிக்க அடையாளங்களை மறுத்துள்ளோரின் கூச்சல், அமளி ஆகியவற்றால் சற்றும் அசையாதிருந்திட உமது ஊழியர்களின் உள்ளங்களை அதனைக் கொண்டு தூய்மைப்- படுத்திடுவீராக. உந்தன் அழைப்பைச் செவிமடுத்தவுடன், உந்தன்  கருணையின்பால் விரைந்துள்ள அவர்களை, இவ்வுலகின் மாற்றங்களோ, வாய்ப்புகளோ, அல்லது எவ்வித மனித வரம்புகளோ உம்மை  அணுகுவதிலிருந்து தடுக்கப்படாதிருக்கின்ற ஊழியர்கள் இவர்களே.

என் கடவுளே, உமது  ஒற்றுமைக்குச் சாட்சியமளிப்பவனும், உமது  ஒருமையை ஒப்புக்கொள்பவனும், உமது  மாட்சிமையின் வெளிப்பாடுகள் முன் பணிவுடன் சிரந்தாழ்த்து- பவனும், உமது மேன்மையான மகிமை ஒளியினுடைய பிரகாசத்தைக் கீழ்நோக்கிய வதனத்துடன் கண்டுணர்ந்தவனும்  நானேயாவேன். உமது மாட்சிமை, வலிமை ஆகியவற்றின் சக்தி மூலமாக நீர் மனிதர்களின் கண்களுக்கு வெளிப்படுத்தியுள்ள, உமக்கே உரிய இயல்பை அறிந்திட  நீர் என்னை இயலச் செய்தபின், உம்மீது  நான் நம்பிக்கை கொண்டவனாவேன். அனைத்திலிருந்தும் முழுமையாகப்  பற்றறுத்துக்-கொண்டும், உமது வெகுமதிகள், தயைகள் ஆகியவற்றின்  கயிற்றை உறுதியாகப் பற்றிக்-கொண்டும், அவர்பால் நான் திரும்பியுள்ளேன். 

அவரது உண்மையையும், அவருக்கென  கீழே அனுப்பப்பட்டுள்ள  அனைத்து அற்புத சட்டங்கள், கட்டளைகள்  ஆகியவற்றின்  உண்மையையும் நான் ஏற்றுக்கொண்டுள்ளேன்.  உமது அன்பிற்-காகவும், உமது  ஆணையை  நிறைவேற்றிடவும் நான் உண்ணா நோன்பைக் கடைப்பிடித்தும்,  உமது வாழ்த்தை என் நாவினால் உச்சரித்துக்கொண்டும், உமது அகமகிழ்விற்கு ஏற்பவும் என் நோன்பைத் துறந்துள்ளேன். என் பிரபுவே, பகல் வேளையில் உண்ணா நோன்பிருந்தும், இரவு நேரத்தில் உமது வதனத்தின் முன் சிரம்தாழ்பணிந்தும், மேலும், உமது உண்மையை மறுத்தும், உமது அடையாளங்களை நிராகரித்தும், உமது சான்றுகளை நம்ப மறுத்தும், உமது சொற்களின் உண்மையைத் திரித்துக் கூறுவோருள் ஒருவனாக என்னைக் கணக்கிட்டுக் கொண்டுவிடாதீர்.

என் பிரபுவே, உமது கண்களைக் கொண்டே உம்மைக் கண்டுகொள்ள, எனது கண்களையும் உம்மை  நாடிவந்துள்ள அனைவரின் கண்களையும் திறந்திடுவீராக.

உமது கட்டளைக்கிணங்க நீர் தேர்வுச் செய்துள்ளவரும், உமது உயிரினங்கள் அனைத்திற்கும்   மேலாக  உமது   சலுகைகளுக்காக நீர் தனித்து ஒதுக்கியுள்ளவரும், உமது அரசாட்சியை நீர் வழங்கிட விரும்பியவரும், மற்றும், நீர் விசேஷமாக ஆதரித்தும், உமது மக்களுக்கான செய்தியை ஒப்படைத்துமுள்ளவருமான அவரிடம், நீர்  கீழே அனுப்பியுள்ள திருநூலில் நீர் எங்களுக்கு வழங்கியுள்ள உமது ஆணை இதுவே ஆகும். 

ஆகவே, என் கடவுளே, அருள்கூர்ந்து நாங்கள்   அவரைக் கண்துடுணர்ந்திட எங்களை இயலச் செய்தமைக்காகவும், அவரிடம் கீழே அனுப்பப்பட்டுள்ள எதனையும் ஒப்புக்கொள்ளவும், உமது நூல்களிலும், நிருபங்களிலும் நீர்  வாக்களித்துள்ளவரின் முன்னிலையை அடைந்திடுகின்ற பெருமையை எங்களுக்கு வழங்கியுள்ளமைக்காகவும், நீர்  போற்றுதலுக்-குரியவரே.

ஆகையால், என் கடவுளே, உம்மை  நோக்கித் திரும்பிய முகத்துடன், உமது அருள்மிகு வள்ளன்மை மற்றும் பெருந்தன்மை எனும் கயிற்றினை உறுதியாகப்  பற்றிக்கொண்டும், உமது மென்கருணை, தாராளத் தயை ஆகியவற்றின் நுனியை நான் இறுகப் பற்றிக்-கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர். 

உமது அரசவையின் சூழிடங்களை நோக்கியும், உமது முன்னிலை எனும் சரணாலயத்தை நோக்கித் திரும்பியும், உம் மீதுள்ள அன்பினால் உண்ணா நோன்பைக் கடைப்பிடித்துமுள்ள உமது ஊழியர்களுக்கு நீர்  விதித்துள்ளதை அடைந்திட வேண்டும் எனும் எனது நம்பிக்கையை அழித்திடாதீர் என நான் உம்மிடம் மன்றாடுகிறேன். 

என் கடவுளே, என்னிலிருந்து வெளிப்படுகின்ற எதுவுமே உமது மாட்சிமைக்குச் சற்றும் பொருத்தமில்லாததாகவும், உமது அரசாட்சிக்கு தகுதியற்றதாகவும் உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கின்றேன்.

இருந்தும், உமது  அதிசிறந்த பட்டங்களின்  மகிமை  வழியாக, இத்திருவெளிப்பாட்டில், உமது  பிரகாசமிகு நாமத்தின் வாயிலாக, நீர் உமது  அழகைப் படைப்பினங்கள் அனைத்திற்கும் வெளிப்படுத்தியுள்ள, உமது  திருநாமத்தின் பேரில், உமது விருப்பம் எனும் வலக் கரத்திலிருந்து வழிந்திடும், உமது கருணை எனும் மதுரசத்தையும், உமது தயை எனும் தூய பானத்தையும் என்னைப் பருகிடச் செய்திடுவீராக; அதனால் எனது பார்வையை நான் உம்மீது நிலைப்படுத்தி, இவ்வுலகமும், அதில் படைக்கப்பட்ட யாவும், நீர்  படைக்க விரும்பிடாத விரைந்தோடிடும் ஒரு நாளைப் போன்று என் முன்னே தோன்றிடுமளவுக்கு, உம்மைத் தவிர மற்றனைதிளிருந்தும் பற்றறுத்திருக்கக் கூடும்.

என் கடவுளே, எங்கள் அத்துமீறல்களின் கேடு விளைவிக்கும் விருப்பங்களிலிருந்து எங்களைச் சுத்தப்படுத்தக் கூடியவற்றை உமது  விருப்பம் எனும் சுவர்க்கத்திலிருந்தும், உமது  கருணை எனும் மேகங்களிலிருந்தும் பொழிந்திடச் செய்திடுமாறு நான் உம்மிடம் மேலும் கெஞ்சிக் கேட்கின்றேன்.   நீரே உம்மைக் கருணைக் கடவுள் என அழைத்துக் கொண்டவரே!  மெய்யாகவே, அதி சக்திமிக்கவரும், சர்வ புகழொளிமிக்கவரும், நலன் பயக்குபவரும் நீரே ஆவீர். 

என் பிரபுவே, உம்மை நோக்கித் திரும்பியுள்ளவனைப் புறக்கணித்திடாதீர், அல்லாமலும் உம்மை அணுகியுள்ளவனை உமது   அரசவையிலிருந்து வெகுதூரம் விலக்கிடாதீர்.   உமது அருளையும் தயைகளையும் நாடி தனது கரங்களை ஏக்கத்தோடு ஏந்திடும் இவ்வேண்டுவோனின் எதிர்ப்பார்ப்புகளைச் சிதைத்துவிடாதீர். உமது நேர்மையான ஊழியர்களை உமது மென்கருணை, அன்புப்பரிவு ஆகிய அற்புதங்களை அடைவதை இழக்கச் செய்திடாதீர்.

என் பிரபுவே, நீரே மன்னிப்பவரும் அதி கொடையாளியும் ஆவீர்! நீர் விரும்பியவாறு செய்திடுவதற்குச் சக்திப்படைத்தவர் நீரே.  உமது வல்லமையின் வெளிப்பாடுகள் முன் உம்மைத் தவிர மற்றனைத்தும் வலிமையற்றதாகும்; உமது  செல்வத்தின் அடையாளங்களுக்கு எதிரே யாவும் கதியற்றும், யாவற்றுக்கும் மேலான உமது  அரசாட்சியின் வெளிப்பாடுகளோடு ஒப்பிடுகையில், யாவும் நிலையற்றவையாகவும், உமது  வலிமையின் அடையாளங்கள், சின்னங்கள் ஆகியவற்றோடு நேருக்குநேர் எதிர்படும் போது, யாவும் வலிமை அனைத்தையும் இழந்ததாகவும் இருக்கின்றன.

என் பிரபுவே, நான் விரைந்து  ஓடுவதற்கு உம்மையன்றி அடைக்கலம் வேறென்ன இருகின்றது? மேலும் நான் விரைந்து  சென்றடைந்திடகூடிய புகலிடம் எங்குகுள்ளது? அல்லாமலும், உமது வலிமையின் சக்தியே எனக்குச் சாட்சியாகின்றது! உம்மையன்றி பாதுகாப்பவர் வேறிலர்; விரைந்தோடுவதற்கு உம்மையன்றி வேறிடம் இல்லை; நாடி வருவதற்கு  உம்மையன்றி வேறு தஞ்சமும் கிடையாது.

என் பிரபுவே, உமது நினைவும் போற்றுதலும் எனும்  தெய்வீக இனிமையை என்னைச் சுவைத்திடச் செய்திடுவீராக.  உமது  வலிமையின் மீது ஆணையாக! அதன் இனிமையைச் சுவைத்தவர் எவராயினும், இவ்வுலகமும், அதிலுள்ள  அனைத்தின் மீதான பற்றுகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்வார்; உம்மைத் தவிர வேறெவரின் நினைவிலிருந்தும் தூய்மைப்படுத்திக் கொண்டு, உந்தன்பால் தன் முகத்தை திருப்பிடுவார்.

ஆதலால், என் கடவுளே, உமது அற்புத நினைவினால்  எனதான்மாவை உற்சாகம் பெறச் செய்திடுவீராக; அதனால் நான் உமது நாமத்தை மகிமைப்படுத்தக் கூடும்.  உமது வார்த்தைகளை வாசித்து, நீர் விதித்துள்ளபடி, அதனுள் அடங்கியுள்ள உமது மறைவான பரிசுகளையும், உமது உயிரினங்களின் ஆன்மாக்களையும் உமது ஊழியர்களின் உள்ளங்களையும்  உயிர்ப்-பித்திடவல்ல அவ்வார்த்தைகளைக் கண்டறிய தவறிய  ஒருவனாக என்னைக் கணக்கிட்டுவிடாதீர்.

என் பிரபுவே, உமது நாள்களில் மிதந்து சென்றிடும் இனிய நறுமணங்களினால் கிளர்ச்சியுறச் செய்ததன் விளைவாக, உமது உயிர்களை உமக்காக அர்ப்பணித்தும், உமது அழகினைக் கண்ணுறுவதற்கான அவர்களின் ஆவலினாலும், உமது முன்னிலையை அடைய வேண்டும் எனும் அவர்களின் ஏக்கத்தினாலும், தங்களின் மரணமேடைக்கு விரைந்தும் உள்ளவர்களுள் ஒருவனாக என்னைக் கருதப்படச் செய்திடுவீராக. அவ்வாறு செல்கையில், “எங்கு செல்கிறாய்?” என யாராயினும் அவர்களிடம் வினவினால், “சகலத்தையும் கொண்டுள்ளவரும், ஆபத்தில் உதவுபவரும், சுயஜீவியருமான இறைவனை நோக்கிச் செல்கிறோம்” என அவர்கள் கூறிடுவர்.

உம்மிடமிருந்து அப்பால் திரும்பியோரும், உம்மிடம் இறுமாப்புடன் நடந்துகொண்டோரும் புரிந்திட்ட அத்துமீறல்கள், உம்மீது  அன்பு செலுத்துவதிலிருந்தும், உம்மை நோக்கி அவர்களின் முகங்களைத் திருப்புவதிலிருந்தும், உமது   கருணையின் திசையை நோக்கித் திரும்புவதிலிருந்தும் அவர்களைத் தடுத்திட இயலவில்லை. 

விண்ணுலகத் திருக்கூட்டத்தினரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், நித்திய நகர-வாசிகளால் மகிமைப்படுத்தப்பட்டவர்களும், அதற்கும் அப்பால், உமது அதிவுயரிய எழுதுகோல் அவர்களின் நெற்றியில், “பஹாவின் மக்கள் இவர்களே! வழிகாட்டல் எனும் ஒளியின் சுடர்கள் இவர்கள் மூலமாகவே பொழியப்பட்டுள்ளன”, என பொறிக்கப்பட்டோரும் இவர்களேயாவர். இவ்வாறாகவே, உமது கட்டளைக்கு இணங்கவும், உமது  திருவிருப்பத்திற்கேற்பவும்், உமது மாற்றவியலாத ஆணை எனும் நிருபத்தில் விதிக்கப்பட்டுள்ளது.

ஆதலால், என் கடவுளே, அவர்களின் மேன்மையையும், வாழும்போதோ மறைவுக்குப் பிறகோ, அவர்களை வலம் வந்தோரின் மேன்மையையும் பறைசாற்றுவீராக.  உமது உயிரினங்களுள், நேர்மையானோருக்கு  நீர்  விதித்துள்ளவற்றை அவர்களுக்கும் வழங்கிடு-வீராக. யாவற்றையும் செய்திடவல்லவர் நீரே ஆவீர். சர்வ சக்திமிக்கவரும், ஆபத்தில் உதவுபவரும், சர்வ வல்லவரும், அதி வள்ளன்மை மிக்கவருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.

என் பிரபுவே, இந்த உண்ணா நோன்போடு, எங்களின் உண்ணா நோன்புகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்திடாதீர்; அல்லது, இந்த ஒப்பந்தத்துடன் நீர்  செய்துள்ள ஒப்பந்தங்களையும்  ஒரு முடிவுக்குக் கொண்டுவந்திடாதீர்.  எங்களின் தீய, இழிவான ஆசைகளுக்கு அடிமைப்பட்டதனால், நாங்கள் செய்திடத் தவறிய அனைத்திற்குமாக, உம்மீதுள்ள அன்பிற்காகவும், உமது மகிழ்ச்சிக்காகவும், நாங்கள் செய்துள்ள அனைத்தையும் ஏற்றுக்கொள்வீராக.  எனவே, உமது அன்பையும்  உமது நல்விருப்பத்-தையும் உறுதியாகப் பற்றிக்கொண்டிட எங்களை இயலச் செய்வீராக; மற்றும்  உம்மையும், உமது பிரகாசமிகு அடையாளங்களையும் மறுத்துள்-ளோரின்  விஷமங்களிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பீராக.  உண்மையாகவே, இவ்வுலகு, மறுவுலகு ஆகியவற்றுக்கான பிரபு நீரே ஆவீர்.  மேன்மையானவரும், அதி உயர்வானவருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.

பிரபுவே எனதாண்டவரே, பிரதான புள்ளியும், தெய்வீக மர்மமும், காணவியலாத சாரமும், தெய்வீகத்தின் பகலூற்றும், உமது இறைமையின் அவதாரமானவரும், எவர் மூலமாகக் கடந்தகால அறிவனைத்தும்,  எதிர்கால அறிவனைத்தும் தெளிவாக்கப்பட்டதோ, எவர் மூலமாக உமது  மறைக்கப்பட்ட விவேகம் எனும் முத்துகள் வெளிப்படுத்தப்பட்டதோடு, அரும்பொருளாக மதிக்கப்பட்ட உமது  நாமத்தின் மர்மம் வெளிப்படுத்தப்பட்டனவோ, எவர் மூலமாக  ‘ஆ’ எனும் அட்சரமும் ‘கு’ எனும் அட்சரமும் இணைக்கப்பட்டு, ஒன்றுசேர்க்கப்பட்டனவோ, எவர் மூலமாக, உமது மாட்சிமை, உமது அரசாட்சி, மற்றும் உமது வல்லமை ஆகியவை அறிவிக்கப்பட்டனவோ, எவர் மூலமாக உமது வார்த்தைகள் கீழே அனுப்பப்பட்டும், உமது கட்டளைகள் தெளிவாக வெளியிடப்பட்டும், உமது அடையாளங்கள் எங்கும் பரவச்செய்யப்பட்டும், உமது திருவாக்கு ஸ்தாபிக்கப்பட்டனவோ, எவர் மூலமாக உமது தேர்தெடுக்கப்பட்டோரின் இதயங்கள்  திறந்து காட்டப்பட்டும்,  விண்ணிலும் மண்ணிலுமுள்ள யாவும் ஒன்றுசேர்க்கப் பட்டனவோ, நீர் உமது நாமங்கள் எனும்  இராஜ்யத்தில் அலி முஹம்மது என்றும், உமது மாற்றவியலா ஆணை எனும் நிருபங்களில் ஆவிகளுக்கெல்லாம் ஆவியானவர் என்றும், நீர்  அழைத்துள்ளீரோ, எவருக்கு  உமது சொந்த பட்டப் பெயரையே வழங்கியுள்ளீரோ, எவரது நாமத்திடமே,   உமது கட்டளைக்கிணங்கவும், உமது வல்லமையின் சக்தி வாயிலாகவும், மற்றெல்லா  நாமங்களும் திரும்பிட செய்யப்பட்டனவோ, எவருள் உமது பண்புகள், பட்டப் பெயர்கள் அனைத்தையும் அவற்றின் இறுதி நிறைவைப் பெறச் செய்துள்ளீரோ,   அவரை மகிமைப்படுத்துவீராக.  உமது புலனாகாத உலகிலும், உமது புனித நகரங்களிலும் உள்ள உமது மாசில்லா கூடாரங்களுக்குள் மறைந்து கிடக்கும் நாமங்களும் அவருக்கே உரியவையாகும்.

மேலும், அவர் மீதும், அவரது அடையாளங்களின் மீதும் நம்பிக்கை வைத்தும், அவர்பால் திரும்பியோரையும், அவரது பின்னாளைய அவதாரமான — அவர் தமது நிருபங்களிலும், தமது நூல்களிலும், தமது திருமறைகளிலும் குறிப்பிட்டுள்ள அவதாரத்தின் மீது நம்பிக்கை வைத்தும், அவர் மீது பொழிந்துள்ள அற்புத வசனங்கள் மீதும், இரத்தினம் போன்ற சொற்களின் மீதும் நம்பிக்கை வைத்தோரை மிகைப்- படுத்துவீராக. அவர் தமது சொந்த திருவொப்பந்தத்தை நிறுவுவதற்கு முன்பாக, நீர்  ஒரு திருவொப்பந்தத்தை ஸ்தாபிக்கும்படி கட்டளையிட்ட திரு அவதாரமானவர் இவரேயாவார்.

அவரது புகழையே பாயான் திருநூல் போற்றியுள்ளது.  அதில், அவரது சிறப்பு புகழ்ந்துரைக்கப்பட்டும், அவரது உண்மை உறுதிசெய்யப்பட்டும், அவரது இறையாண்மை பிரகடனப்படுத்தப்பட்டும், அவரது சமயம் முழு நிறைவாக்கப்பட்டுள்ளது.  உலகங்களின் பிரபுவும், உம்மை அறிந்த அனைவரின் ஆவலாகவும் இருப்பவரே! அவர்பால் திரும்பி, அவர் கட்டளையிட்டுள்ளவற்றை நிறைவேற்றிய மனிதன் ஆசி பெறுவானாக!

என் கடவுளே, அவரைக் கண்டுணர்ந்து, அன்பு செலுத்திட எங்களுக்கு உதவியமைக்காக நீர்  போற்றப்படுவீராக. ஆதாலால், அவராலும், உமது தெய்வீகத்தின் பகலூற்றுகளாக இருப்ப-வர்களாலும், உமது இறைமையின்  அவதாரங்களாலும், உமது வெளிப்பாட்டின் கருவூலங்களாலும், உமது அகத்தூன்டலின் களஞ்சியங்களாலும், அவருக்குச் சேவையாற்றவும், கீழ்ப்படியவும் எங்களை இயலச் செய்தும், அவரது சமயத்தின் உதவியாளர்களாக ஆகிடவும், அவரது எதிரிகளை சிதறியோடச் செய்திடுபவர்களாக ஆகிடவும் எங்களுக்கு சக்தி அளிக்குமாறு நான் உம்மை மன்றாடுகிறேன். நீர்  விரும்பிய அனைத்தையும் செய்திடவல்லவர் நீரே. சர்வ  வல்லவரும், சர்வ புகழொளிமிக்கவரும், மனிதர் எல்லாரும்  உதவிக்காக நாடுகின்ற கடவுள் உம்மையன்றி வெறிளர்.

-Bahá'u'lláh
-----------------------

உண்ணா நோன்பு (#11442)

என் பிரபுவாகிய இறைவா, புகழனைத்தும் உமக்கே உரியதாகட்டுமாக! உமது ஆணைக்கேற்ப நாங்கள் உண்ணா நோன்பைக் கடைப்பிடித்துள்ளோம்; உமது அன்பு, உமது நல்விருப்பம் ஆகியவற்றின் வழி அதை இப்பொழுது முடிக்கின்றோம். என் இறைவா, உம்மைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு, உமது சமயத்தின்பால் எங்கள் முகங்களைப் பதித்தவர்களாக உமது அழகின் பொருட்டு  உமது பாதையில் முழுமையாக நாங்கள் ஆற்றியுள்ள செயல்களை அருள்கூர்ந்து ஏற்றுக்கொள்வீராக. அதற்குப் பிரதிபலனாக எங்கள் மூதாதையர் மீதும், இவ்வதி உயரிய, அதி மகிமை வாய்ந்த வெளிப்பாட்டில் உந்தனிலும், உமது வலிமைமிகு அடையாளங்களிலும் நம்பிக்கை வைத்துள்ள அனைவர் மீதும் உமது மன்னிப்பை வழங்குவீராக. நீர் தேர்ந்தெடுத்ததைச் செய்வதற்கு நீர் ஆற்றல் மிக்கவராய் இருக்கின்றீர். மெய்யாகவே, நீரே, அதி மேன்மை மிக்கவர், எல்லாம் வல்லவர், கட்டுப்படுத்தப்படாதவர்.

-Bahá'u'lláh
-----------------------

உண்ணா நோன்பு (#11443)

இறைவா, என் இறைவா, புகழுக்குரியவர் நீரே. எவ்வாறு கட்டாயப் பிரார்த்தனையை உமது ஒருமைத்தன்மையை ஏற்றுக்கொண்டவர்கள் உயர்வதற்கான ஏணியாக ஆக்கியுள்ளீரோ, அவ்வாறே உம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களையும், உமது அன்புக்குரியவர்களையும், உமது ஊழியர்களையும், உமது  இராஜ்யத்தின் மக்களுக்கு ஓர் ஒளியாக ஆக்கியுள்ள உண்ணா நோன்பினைக் கடைப்பிடிக்குமாறு நீர் கட்டளையிட்டுள்ள அந் நாள்கள் இவையே ஆகும். என் இறைவா, மனுக்குல முழுமைக்குமாக நீர் விதித்துள்ள  மகிமை, நற்பெருமை ஆகிய இவ்விரு வலிமைமிகு தூண்களின் வழி, இறைப்பற்றற்றோரின் தீமைகளிலிருந்தும், விஷமம் புரிந்திடுவோர் ஒவ்வொருவரின் சதிச் செயல்களிலிருந்தும், உமது சமயத்தைப் பாதுகாத்தருளுமாறு உம்மை இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன். இறைவா, உமது சக்தி, உமது வல்லமை ஆகியவற்றின் வழி நீர் வெளிப்படுத்தியுள்ள அவ்வொளியினை மறைத்து விடாதீர். உமது கட்டளை, அரசுரிமை ஆகியவற்றின்வழி கண்ணுக்குப் புலப்படுவதும்  கண்ணுக்குப் புலப்படாததுமான  விண்ணவர் படையினரைக் கொண்டு உம்மில் உண்மையான நம்பிக்கையைக் கொண்டோருக்கு உதவிடுவீராக. எல்லாம் வல்லவரும், அதி சக்தி மிக்கவருமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

-Bahá'u'lláh
-----------------------

உண்ணா நோன்பு (#11444)

பிரபுவே, என் இறைவா, நீர் அதி மேன்மைக்கு உரியவராவீராக! உமது அன்பிற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் உண்ணா நோன்பைக் கடைப்பிடிக்குமாறு நீர் பணித்துள்ளோர், உமது சட்டத்தின்பால் தங்களின் விசுவாசத்தை மெய்ப்பித்து உமது வாசகங்களையும் விதிகளையும் பின்பற்றுவோர், உமது அண்மையை அடைந்து, உமது வதனத்தைக் கண்ணுற்று, அதே வேளையில் அவர்களின் உண்ணா நோன்பையும் முடித்துள்ளோர் ஆகியவர்கள் சாட்சியாக உம்மை வேண்டிக் கொள்கின்றேன். உமது மகிமை சாட்சியாக! அவர்கள் உமது நல்விருப்பம் எனும் அவையின்பால் திரும்பியுள்ளதால், அவர்களின் வாழ்நாள் அனைத்துமே உண்ணா நோன்புக்குரிய நாள்களாகும். உமது விருப்பம் எனும் திருவாய், “மனிதர்களே, எமது அழகின் நிமித்தம் நோன்பைக் கடைப்பிடிப்பதுடன், அதற்குக் கால வரம்பு எதுவும் நியமிக்காதீர்,” என அவர்களிடம் நீர் கூறுமிடத்து, உமது மகிமை என்னும் மாட்சிமை சாட்சியாக, அவர்கள் ஒவ்வொருவரும் அதை விசுவாசத்துடன் கடைப்பிடித்து, எது உமது சட்டத்தை மீறுகின்றதோ அதில் ஈடுபடாது, உமக்காக அவர்கள் தங்கள் ஆன்மாக்களையே துறக்கும் வரை அவ்வாறே செய்து வருவர்; ஏனெனில் அவர்கள் உமது அழைப்பின் இனிமையைச் சுவைத்துள்ளது மட்டுமன்றி, உமது நினைவு, புகழ்ச்சி, ஆகியவற்றுடன் உமது ஆணை என்னும் உதடுகளிலிருந்து பிறந்த வார்த்தைகளினாலும் மதி மயக்கம் அடைந்துள்ளனர்.

மேன்மைமிக்கவரும், அதி உயர்வானவருமாகிய உமது தன்னகத்தினாலும் பிந்திய கால அவதாரமான எவரின் மூலம் நாமங்களின் இராஜ்யமும், பண்புகளின் ஆதிக்கமும் அதிரச் செய்யப்பட்டனவோ, பூவுலக, சுவர்க்கலோக மக்கள் பேரின்ப மயக்கம் உற்றனரோ, வெளிப்பாடு, படைப்புலகம் ஆகிய இராஜ்யங்களில் வசிப்போர் உமது நல்விருப்பத்திற்கு முரணானவற்றிலிருந்து உண்ணா நோன்பிருந்து, உம்மைத் தவிர மற்றவற்றின்பால் திரும்புவதிலிருந்து தங்களைத் தடுத்துக் கொண்டவர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் நடுங்கினரோ, அந்த அவதாரத்தின் வாயிலாகவும், எங்களையும் அவர்களோடு ஒன்று சேர்த்து, அவர்களுடைய பெயர்களை எந்த நிருபத்தில் எழுதியுள்ளீரோ அதே நிருபத்தில் எங்கள் பெயர்களையும் எழுதிடுமாறு மன்றாடுகின்றேன். இறைவா, உமது வல்லமையின் அற்புதங்களாலும், உமது அரசாட்சி, மகோன்னதம் ஆகியவற்றின் அடையாளங்களினாலும் உமது திருநாமங்கள் எனும் கடலிலிருந்து அவர்களின் பெயர்களை அனுப்பி வைத்துள்ளீர்; அத்துடன் உமது அன்பெனும் பொருளினால் அவர்களின் உள் சாராம்சங்களையும், உமது சமயத்தின் உந்து சக்தியினால் அவர்களின் அதி உள்ளார்ந்த நிலைகளையும் படைத்துள்ளீர். பிரிவே தொடரா மீண்டும் ஒன்றிணைதல், தூரமறியா அண்மைய, முடிவே அறியா நித்தியம் ஆகியவை அவர்களுடையதே. மெய்யாகவே, இவர்கள் என்றும் உம்மை நினைவு கூர்ந்திடுவோரும், எக் காலமும் உம்மைச் சுற்றி வலம் வருபவர்களும், உமது முன்னிலை எனும் புகலிடத்தையும் உம்முடன் மீண்டும் ஒன்றிணைதல் எனும் கா’ஆபாவையும் வலம் வந்திடும் ஊழியருமாவர். என் இறைவா, அவர்கள் உமது வதனத்தின் ஒளிகளைக் கண்ணுறுகையில், தங்கள் முகங்களை உமது திசையில் வைத்து, உமது மகத்துவத்திற்கு அடிபணிந்து, உம்மைத் தவிர மற்றதனைத்திலிருந்தும் பற்றறுத்த நிலையில் உமது அழகின் முன் சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வணங்கியதைத் தவிர, நீர், அவர்களுக்கும் உமக்குமிடையே வேறெந்த வேறுபாட்டையும் நியமித்ததில்லை.

என் பிரபுவே, உமது தெளிவாய்த் துலங்கிடும் நூலில் நீர் வெளிப்படுத்தியுள்ளவற்றிற்கு ஏற்ப உமது கட்டளை, ஆணை ஆகியவற்றிற்கிணங்க நாங்கள் உண்ணா நோன்பிருந்துள்ளோம். இந் நாள் ஒரு முடிவிற்கு வந்து, நோன்பைத் துறக்கும் வேளை வரும் வரையில் எங்களின் ஆன்மாக்களை உணர்ச்சிகளிலிருந்தும், நீர் வெறுப்பன-வற்றிலிருந்தும் தடுத்துள்ளோம். ஆகையால், ஆர்வமிகு அன்பர்கள் இதயங்களின் ஆவலானவரும், உணருந்திறன் பெற்றுள்ள ஆன்மாக்களின் நேசரும் ஆனவரே, உமக்காக ஏங்குவோர்் இதயங்களின் ஆனந்தப் பரவசமும் உம்மைத் தேடுவோரது ஆவலின் குறிக்கோளும் ஆனவரே, உமது அண்மை எனும் சூழலில் உமது முன்னிலை எனும் சுவர்க்கத்திலும் வானளாவப் பறந்து, உமது அன்பு, நல்விருப்பம் என்னும் பாதையில் நாங்கள் ஆற்றியவற்றை எங்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளுமாறு உம்மை மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றேன். ஆகவே, உமது ஒருமைத் தன்மையை ஏற்றுக்கொண்டவர்கள், உமது ஏகத்துவத்தை ஒப்புக்கொண்டவர்கள், உமது மாட்சிமையின் அடையாளங்கள் ஆகியவற்றின் முன்னிலையில் தங்களைத் தாழ்த்திக் கொண்டுள்ளவர்கள், உமது அருகில்  தஞ்சம் புகுந்து உம்மில் புகலிடம் தேடியவர்கள், உம்மைச் சந்தித்து, உமது முன்னிலை எனும் அவையினை அடைந்திடும் ஆவலில் தங்களின் வாழ்க்கைகளை அர்ப்பணித்தவர்கள், உமது அன்பிற்காக இவ்வுலகையே தங்களின் பின்புறம் வீசி எறிந்து, உமது அண்மையை அடைந்திடும் ஆவலில் உம்மைத் தவிர மற்றெல்லா உறவுகளையும் துண்டித்துக் கொண்டவர்கள் ஆகியோரின் மத்தியில் எங்களின் பெயர்களை எழுதிடுவீராக. எவரின் இதயங்கள் உமது நாமத்தை உச்சரித்ததும் உமது அழகின்பாலுள்ள ஆர்வமிக்க ஆவலினால் உருகினவோ, எவரின் கண்களில் உம்மைக் காணவேண்டும், உமது அரசவையில் பிரவேசிக்க வேண்டும், என்ற பேராவலினால் கண்ணீர் பொங்கி வழிந்ததோ, அவர்கள்தாம் இவ்வூழியர்கள்.

இதுவே உமது ஒற்றுமைக்கும், ஒப்பற்ற நிலைக்கும் சாட்சியமளிக்கும் எனது நா; உமது தாரளத்தன்மை, எண்ணிறந்த கொடைகள் ஆகியவற்றின் ஆசனத்தைத் தரிசிக்கும் எனது கண், உமது அழைப்பையும் உமது வெளியிடுகையையும் செவிமடுக்கத் தயாராக இருக்கும் எனது செவி. ஏனெனில், என் இறைவா, உமது விருப்பம் எனும் திருவாயினின்று வந்திடும் வார்த்தைகள், என்றும் வற்றாதவையென நீர் விதித்துள்ளீர் என்பதிலும், உமது வார்த்தைகளையும், வசனங்களையும் செவிமடுப்பதற்குப் புனிதப்படுத்தப்பட்ட செவிகள் அளிக்கப்பட்டுள்ளோர், எல்லா நேரங்களிலும் செவிமடுத்துக் கொண்டுள்ளனர் என்பதிலும் நான் உறுதியடைந்துள்ளேன். மேலும், என் பிரபுவே, இவையே உமது சலுகை, மென்கருணை என்னும் சுவர்க்கத்தை நோக்கி உயர்த்தப்பட்டுள்ள எனது கரங்கள். அன்றியும் உம்மைத் தவிர்த்து தனக்கென வேறொருவரை அன்பராகவோ, உம்மையன்றி வேறொருவரை அருள் பொழிபவராகவோ, உம்மையல்லாது வேறொருவரை அரசனாகவோ, உமது கருணை எனும் நிழலின் கீழ் அல்லாது வேறோர் அடைக்கலத்தையோ, உமது விண்ணுலகிலும், உமது மண்ணுலகிலும் வாழும் அனைவருக்கும் நீர் திறந்துவிட்டுள்ள இந் நுழைவாயிலின் முன்னிலையைத் தவிர வேறொரு புகலிடம் எதையும் கொண்டிராத இவ்வேழையை நீர் திருப்பி அனுப்பிடுவீரா? உமது மகிமைமீது ஆணை, இல்லை! உமது இராஜ்யம் நீடிக்கும் காலம் வரை நீர் என்னைக் கடுந்துன்பங்களுக்கு உட்படுத்திடினும், உமதன்புக் கருணையில் கொண்டுள்ள உறுதியில் நான் தளராமல் இருப்பவனாவேன்; மேலும் உம்மைக் குறித்து யாரேனும் என்னிடம் வினவுவாராயின் எனதுடலின் ஒவ்வோர் அங்கமும்: “அவர் தமது செயல்களில் நேசிக்கப்படுபவரும், தனது ஆணைகளுக்குக் கீழ்ப்படியப்படுபவரும், தனது இயல்பில் கருணைமிக்கவரும், தனது படைப்பினங்களிடம் இரக்கமுடையவரும் ஆவார்!”, எனப் பிரகடனப்- படுத்திடும்!

உமக்காக ஏங்குவோர் இதயங்களினால் மிகவும் நேசிக்கப்படுபவரே, உமது வலிமையே எனக்குச் சாட்சியம் பகர்கின்றது, உமது நுழைவாயிலில் இருந்து என்னை நீர் திருப்பியனுப்பிடினும், உமது ஊழியர்களிடையே உள்ள கொடுங்கோலர்களின் வாள்களுக்கும், உமது படைப்பினங்களிடையே உள்ள இறைப்பற்றற்றோரின் அடிக்குங் கோல்களுக்கும் என்னைப் பலியாகக் கைவிட்ட போதும், உம்மைக் குறித்து யாரேனும் என்னிடம் வினவுவாராயின் எனதுடலின் ஒவ்வோர் உரோமமும்: “மெய்யாகவே, அனைத்து உலகங்களினால் மிகு நேசிக்கப் படுபவரும் அவரே; அதி வள்ளன்மை மிக்கவரும் அவரே; என்றும் நிலைத்திருப்பவரும் அவரே! தம்மிடமிருந்து என்னைத் தூர வைத்திடும் அதே வேளையில் அவர் என்னைத் தமதருகே ஈர்க்கின்றார்; அவரது முன்னிலையை அடைந்திட எனக்கு அனுமதி மறுக்கும் அதே வேளை எனக்கு அவர் தமது புகலிடத்தையும் அளிக்கின்றார். எவரைத் தவிர்த்து மற்றதனைத்திலிருந்தும் சுதந்திரம் அடைந்தேனோ, எவரைத் தவிர்த்து மற்றெல்லாவற்றிலிருந்தும் உயர்த்தப்பட்டேனோ, அவரை விஞ்சிய கருணையாளர் வேறெவரையும் நான் கண்டிலேன்”, எனப் பிரகடனப்படுத்தும்.

என் இறைவா, மண்ணுலக, விண்ணுலக இராஜ்யங்களிலிருந்து சுதந்திரமடையும் அளவு எவர் உம்மால் வளமாக்கப்பட்டுள்ளாரோ அவர் நலம் பெற்றவராவார். எவர் உமது செல்வம் என்னும் கயிற்றை இறுகப் பற்றி உமது வதனத்தின் முன் அடிபணிந்துள்ளாரோ அவரே தனவந்தராவார்; அனைத்திற்கும் மேலாக அவருக்கு நீரே போதுமானவர். எவர் உம்மைத் தவிர்த்து,  உமக்குமுன்  செருக்குக் காட்டி  உமது  முன்னிலையை விட்டு விலகி, உமது அடையாளங்கள் மீது நம்பிக்கையற்று இருக்கின்றாரோ, அவரே வறியவராவார். என் இறைவனும், என் நேசருமானவரே, அகந்தை, தீவிர உணர்ச்சியெனும் காற்று அதன் விருப்பத்திற்கிணங்க இயக்கிடவும், வழிகாட்டிடவும் செய்திடுவோருடன் அல்லாது உமது சித்தம் என்னும் மென்காற்று, தன் விருப்பத்திற்கிணங்க இயக்கிடுவோரின் எண்ணிக்கையில் என்னையும் சேர்த்திடுவீராக. எல்லாம் வல்ல, மேன்மைமிகு, அதி வள்ளன்மை மிக்க இறைவன் உம்மையன்றி வேறிலர் .

என் இறைவா, நீர், உமது திருநாமத்துடன் தொடர்புப் படுத்தியுள்ள ‘அலா (உயர்வு) எனும் இவ்வதி மேன்மைமிகு மாதத்தில் உண்ணா நோன்பிருக்க, எனக்கு அருள் கூர்ந்து உதவியமைக்காக, ஒளியெல்லாம் உமக்கே உரியதாகட்டும். இம்மாதத்தில் உண்ணா நோன்பிருந்து, அதன்வழி உமது அண்மையை அடைந்திட வேண்டுமென, நீர் உமது ஊழியர்களுக்கும், உமது மக்களுக்கும் பணித்துள்ளீர். எவ்வாறு முதல் மாதம் பஹா என்னும் உமது திருநாமத்துடன் தொடங்கியதோ அதே போன்று வருடத்தின் நாள்களும் மாதங்களும் உண்ணா நோன்புடன் உச்ச நிலையை அடைந்தன, அதனால் நீரே முதலும் இறுதியுமானவர், வெளிப்படுத்தப்பட்டவரும், மறைந்துள்ள-வருமென சாட்சியமளித்து, உமது சமயத்தின் மகிமை வாயிலாக மட்டுமே, எல்லா நாமங்களின் மகிமையும் அருளப்படுகின்றது எனவும், உமது திருமொழி, உமது விருப்பம் ஆகியவையின் மூலமாகவே பொருளுரைக்கப்பட்டு, உமது நோக்கத்தின் மூலமாகவே வெளிப்படுத்தப்படவும் கூடும் என அனைவரும் ஐயத்திற்கிடமின்றி உறுதியளிக்கப்படுவர். இம்மாதத்தினை உம்மிடமிருந்து வரும் ஒரு நினைவுகூறலாகவும் கௌரவமுமாகவும் அவர்களிடையே உமது பிரசன்னத்தின் அடையாளமாகவும் இருக்குமாறு விதித்துள்ளீர். இம்மாதத்தினை அவர்கள் மத்தியில் உமது நினைவாகவும், உமது கௌரவமாகவும், அவர்களிடையே உமது இருத்தலின் அடையாள-மாகவும் நியமித்துள்ளீர், அதனால் அவர்கள் உமது மகோன்னதம், உமது மாட்சிமை, உமது இறைமை, உமது மகிமை ஆகியவற்றை மறக்காதிருக்கவும், நினைவுக்கெட்டாத காலந்தொட்டுப் படைப்பு முழுமைக்கும் நீரே ஆட்சியாளராக இருந்து வந்துள்ளீர், இனியும் இருந்து வருவீர் என அவர்கள் நன்கு உறுதியடைந்திடவும் கூடும். விண்ணுலகிலும், மண்ணுலகிலும் படைக்கப்-பட்டுள்ள எதுவுமே உமது ஆளுகையைத் தடை செய்யவோ, வெளிப்பாடு, படைப்பு என்னும் இராஜ்யங்களிலுள்ள எவருமே நீர் உமது நோக்கத்தை நிறைவேற்றுவதைத் தடுத்திடவோ இயலாது.

என் இறைவா, உமது தவறா தற்காப்பின் வழி பாதுகாக்கப்பட்டு உமது அதி விழுமிய கருணையின் நிழலின் கீழ் அடைக்கலம் அளிக்கப்பட்டோரைத் தவிர, பூவுலகின் மனித இனம் அனைத்தையும் புலம்பச் செய்த உமது நாமத்தின் பேரால், உமது ஊழியர்கள் உமக்கெதிராக எழுந்த போதினும், உமது மக்கள் உம்மை விட்டு அப்பால் திரும்பியும், உமது நாமத்தை உச்சரிக்கவோ, உந்தன்பாலான தொடர்புறவு எனும் புகலிடத்தின்பாலும், உமது புனிதம் எனும் கா’ஆபாவின்பாலும் தனது முகத்தைத் திருப்பவோ, எவருமே  இல்லாது போயினும், நான் ஒருவனாகவும், தனியனாகவும் முன்னெழுந்து, உமது சமயத்தை வெற்றி பெறச் செய்யவும், உமது திருமொழியினை மேன்மைப்படுத்தவும், உமது இறைமையைப் பிரகடனப்படுத்தவும், உமது மாண்புமிகு தன்னகத் தன்மையின் புகழ்ச்சியினைக் கொண்டாடவும், உமது சமயத்தில் எங்களை உறுதிப்படுத்தவும், உமதன்பில் பற்றுறுதியுடன் இருக்கவும், செய்திடுமாறு, உம்மை மன்றாடிக் கேட்கின்றேன். மேலும் என் பிரபுவே, போற்றுதற்குரிய நாமம் என்று ஒன்றை நான் கருதும் போதெல்லாம் இதனை நான் உம்முடனேயே தொடர்புப்படுத்தியுள்ளதால், எந்த நாமத்தைக் கொண்டு உம்மை நான் போற்றிப் புகழ முயன்றிடினும், நான் குழப்பமே அடைந்துள்ளேன். ஏனெனில், உமது புனித முன்னிலையில், உம்மை வழிபட உம்முடன் நான் தொடர்புப்படுத்தும் உமது அனைத்து மேன்மைமிக்கப் பண்புகளும், உமது அனைத்து அதி சிறந்த நாமங்களும், எனது சுய புரிந்துகொள்ளலின் அளவினையே காட்டுவ-தல்லாது, வேறொன்றுமில்லை என்பதனை நான் முழுமையாக உணர்ந்துள்ளேன். உம்மைத் தவிர வேறெவரின் வருணனைக்கும், அறிவுக்கும் மேலாகவே உமது மெய்ம்மை நிலை அளவிறந்த மேன்மைக்குரியதாகும்; மேலும் உம்மை அடைவதற்கான அவர்களின் முயற்சிகளிலான உமது படைப்பினங்களின் போற்றதலுக்கும் உமது ஊழியர்களின் புகழ்ச்சிக்கும் அப்பால் நீர் புனிதமானவராகவே இருக்கின்றீர். உமது ஊழியர்களிடமிருந்து தோன்றும் எதுவுமே அவர்களின் சொந்த குறை வரம்புகளுக்கு உட்பட்டவையும், அவர்களின் வீண் எண்ணங்கள், கற்பனைகள் ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்-பட்டவையுமாகும்.

அந்தோ! அந்தோ! என் நேசரே, உம்மைத் தகுந்த முறையில் புகழ்வதற்கான எனது இயலாமைக்-காகவும், உமது நாள்களில் எனது குறைபாடுகளுக்காகவும், நான் வருந்துகின்றேன்! என் இறைவா, நான் உம்மை, எல்லாம் அறிந்தவர் என அறிவித்தேனாகில், உமது விருப்பம் என்னும் ஒரே விரலினால் வாய் பேசாத பாறை ஒன்றினைச் சுட்டி, அதற்கு நீர் கடந்த கால, வருங்கால அறிவனைத்தையும் வெளிப்படுத்திடும் சக்தியை அளித்திடுவீர் என்பதையும், மேலும் உம்மை சர்வ சக்தி வாய்ந்தவர் என நான் புகழ்வேனாகில், விண்ணுலகங்களையும் மண்ணுலகையும் அதிரவைக்கும் அளவிற்கு உமது நோக்கம் என்னும் திருவாயிலிருந்து வெளிப்பட்டிடும் ஒரே வார்த்தை அதற்குப் போதுமானதென்பதையும் நான் தயக்கமின்றி உணர்கின்றேன்.

உம்மை அறிந்து கொண்டோர் அனைவரின் நேசரே, உமது மகிமையே எனக்குச் சாட்சியம் அளிக்கின்றது; உமது அறிவெனும் வெளிப்பாடுகள்  முன்னால், கற்றவர் ஒருவர் தனது அறியாமையை ஒப்புக்கொள்ள மறுப்பாராகில், அவர் உமது மக்களிலேயே அதி அறிவிலி எனக் கணித்திடப்படுவார்; மேலும், உமது சக்தியின் ஆதாரங்கள்் முன், சக்திமிக்க ஒருவர், தனது பலவீனத்தை ஒப்புக்கொள்ள மறுப்பாராகில், அவர் உமது படைப்பினங்களிலேயே, அதி பலவீனராகவும், அதி கவனமற்றவராகவும் கருதப்படுவார். இது இவ்வாறானதுதான் என்பது எனது அறிவுக்கும்,  உறுதிப்பாட்டிற்கும் தெளிவாய் இருக்கையில், நான் எங்ஙனம் உம்மை மேன்மைப்படுத்தவோ, வருணிக்கவோ, புகழவோ இயலும்? ஆதலின் நான், எனது பலவீனத்தை உணர்ந்து, உமது வலிமையெனும் பாதுகாப்பை நோக்கி விரைந்துள்ளேன்; எனது ஏழ்மையை உணர்ந்து, உமது செல்வம் எனும் நிழலின் கீழ் அடைக்கலம் நாடியுள்ளேன்; மேலும் எனது சக்தியின்மையை உணர்ந்து, உமது சக்தி, வலிமை எனும் திருக்கூடாரத்தின் முன் நிற்பதற்கு முன்னெழுந்துள்ளேன். உம்மையன்றி வேறு ஆதரவளிப்பவர் எவரையும் நாடாத இவ்வேழையை நீர் ஒதுக்கித் தள்ளவோ, உம்மையன்றி வேறு எவரையும் தனது உண்மை நேசராகக் கொண்டிடாத இவ்வந்நியனைத் திருப்பி அனுப்பிடவோ செய்திடுவீரா?

பிரபுவே, என்னுள்ளிருக்கும் அனைத்தையும் நீர் அறிவீர், ஆனால், உம்முள் இருப்பது யாதென யான் அறியேன். உமது அன்பான அருள்பாலிப்பின் வழி என்மீது இரக்கம் காட்டி உமது நாள்களில் என் இதயத்திற்கு அமைதியளிக்கக் கூடியதனைக் கொண்டு எனக்குத் தெய்வீக ஊக்கம் அளித்து, உமது புனித முன்னிலையின் வெளிப்பாடுகள் வழி எனதான்மாவுக்குச் சாந்தியளிப்பீராக. பிரபுவே, உமது வதனத்தின் ஒளிகளின் பிரகாசங்களினால், படைப்புப் பொருள்கள் அனைத்தும் ஒளிரச் செய்யப்பட்டு, உமது வெளிப்படுத்துதலை, உமது ஊழியர்களிடையே ஆழ்ந்து உறங்கிக் கொண் டிருப்பவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கும் அவ் வெளிப்படுத்துதலைத் தவிர, யாம் வேறெதனையும் அதனுள் கண்டிராத வகையில், உமது ஒப்பற்ற வெளிப்படுத்துதல்களின் மாட்சிமை  காரணமாக மண்ணுலக விண்ணுலகவாசிகள் சுடரொளி விட்டுப் பிரகாசிக்கின்றனர்.

என் பிரபுவே, படைப்புலக இராஜ்யங்கள், அவை கண்களுக்குப் புலப்படுபவையோ புலப்- படாதவையோ, அவை அனைத்தையும் சூழ்ந்துள்ள உமது அருளை எனக்குக் கிட்டாது செய்திடாதீர். என் இறைவா, மனுக்குலம் முழுமையும் மீண்டும் திரும்பி, உமதருகினை அடையும்படி அழைப்பு விடுத்து, உமது கயிற்றினைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ளவும் தூண்டிய பிறகும் நீர் வெகு தூரம் விலகி இருக்கலாமா? என் நேசரே, உமது மாசுபடுத்தவியலாத திருநூலிலும், உமது அற்புத வசனங்களிலும், உமக்காக ஏங்குவோர் அனைவரையும் உமது அருட்பேறு எனும் அரங்கத்திலும், உமக்காக ஆவலுறுவோரை உமது வள்ளன்மைமிகு தயையெனும் நிழலின் கீழும், உம்மைத் தேடுவோரை உமது இரக்கம், அன்புக்கருணை என்னும் விதானத்தின் கீழும் ஒன்று திரட்டுவேன் என நீர் வாக்களித்திருந்தும் என்னை மட்டும் ஒதுக்கித் தள்ளிடுவீரா?

என் இறைவா, உமது சக்தி மீது ஆணை, என் புலம்பல்கள் என்னுள், இதயத்தையே நிறுத்தி விட்டுள்ளன, அதன் வேதனைக் குரல்கள் என் கைகளிலிருந்து கடிவாளத்தினைப் பற்றிக் கொண்டுள்ளன! எப்பொழுதெல்லாம் நான் என்னை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டு, உமது கருணையெனும் அற்புதங்களையும், உமது தயைமிகு அருள்பாலிப்பு எனும் அடையாளங்-களையும், உமது   தாராளத் தன்மையின் ஆதாரங்களையும் கொண்டு, எனது ஆன்மாவை மகிழ்வுறச் செய்கின்றேனோ, அப்பொழுதெல்லாம் நான் உமது நீதியின் வெளிப்பாடு முன்னும், உமது வெஞ்சினம் என்னும் அடையாளங்கள் முன்னும் நடுக்கமுறுகின்றேன். நீர் இவ்விரு நாமங்களினால் அறியப்பட்டு, இவ்விரு குணவியல்புகளினால் வருணிக்கவும் பட்டுள்ளீர் என்பதை நான் அறிவேன்; எனினும் என்றும் மன்னிப்பவர் எனும் உமது நாமத்தினால் வணங்கி வேண்டப்படுகிறீரோ வெஞ்சினமிக்கவர் எனும் உமது நாமத்தினால் வேண்டப்படுகிறீரோ என்பதைக் குறித்து, நீர் அக்கறை கொள்வதில்லை. உமது மகிமை சாட்சியாக, அனைத்திலும் உமது இரக்கமே விஞ்சி நிற்கின்றது என்பதை நான் அறிந்திலனாகில் எனதுடலின் அங்கங்கள் இலதாகி விட்டிருக்கும், எனது மெய்ம்மை அணைக்கப்பட்டு, எனது உள்ளுருவும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கும். ஆனால், பொருள்கள் அனைத்தையும் உமது அருள் சூழ்ந்துள்ளதையும், படைப்பு முழுமையையும் உமது கருணை அரவணைத்துள்ளதையும் நான் கண்ணுறும்போது, எனதான்மாவும் எனது அதி உள்ளார்ந்த உருவும் நன்கு உறுதியடைகின்றன.

அந்தோ, அந்தோ! என் இறைவா, உமது நாள்களில் என்னிடமிருந்து நழுவிச் சென்றிட்டவை குறித்து நான் வருந்துகின்றேன்; மேலும், அந்தோ, அந்தோ, எனது இதயத்தின் ஆவலே, உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், உமது நம்பிக்கைக்-குரியவர்களும் கண்ணுற்றிராத இவை போன்ற நாள்களில் உமக்குரிய சேவையிலும், கீழ்ப்படிதலிலும் நான் செய்யாமல் விட்டுச் சென்றவைக்காகவும் வருந்துகின்றேன்! என் கடவுளே, உமது தன்னகத்தினாலும் உமது கருணை எனும் அரியணை மீது அமர்ந்துள்ள உமது சமயத்தின் அவதாரத்தினாலும் என்னை உமது சேவையிலும் நல்விருப்பத்திலும் உறுதிப்படுத்துமாறு வேண்டிக் கொள்கின்றேன். உம்மிடமிருந்து அப்பால் திரும்பியும், உமது வாசகங்களை நம்பாதவர்களிடமிருந்தும், உமது உண்மையை மறுத்து, உமது சான்றுகளை ஏற்க மறுத்தோரிடமிருந்தும், உமது ஒப்பந்தத்தையும் இறுதி விருப்ப சாஸனத்தையும் மீறியோரிடமிருந்தும் என்னைப் பாதுகாப்பீராக.

பிரபுவே, எனதாண்டவரே, உமது சாராம்சத்தின் அவதாரம், உமது ஒருமைத் தன்மையின் பகலூற்று, உமது அறிவின் சுரங்கம், உமது வெளிப்பாட்டின் தோற்றிடம், உமது அருட்தூண்டலின் களஞ்சியமும் உமது இறைமையின் அரியாசனம், உமது தெய்வத்தன்மையின் உதயஸ்தலம், மூலாதார மையம், அதி உயரிய வதனம், ஆதி வேர், தேசங்களை உயிர்ப்பிப்பவர், ஆகிய அவருக்கே போற்றுதல் எல்லாம் உரியதாகட்டும்; மேலும் அவரிலும், அவரது வசனங்களிலும், நம்பிக்கை வைப்பதில் முதன்மையானவரும்,* எவரை நீர் உமது அதி விழுமிய திருவாக்கின் மேம்பாட்டிற்கான அரியணையாகவும், உமது அதி மேன்மையான நாமங்களின் குவிமையக் குறியாகவும், உமது அருள்பாலிப்பு என்னும் கதிரவனின் பிரகாசமெனும் பகலூற்றாகவும், உமது நாமங்கள், இயல்புகள் ஆகியவற்றின் தோற்றத்திற்கான உதய ஸ்தலமாகவும், உமது விவேகம், உமது திருக் கட்டளைகள் எனும் முத்துக்களின் கருவூலமாகவும் ஆக்கியுள்ளீரோ, அவர் மகிமையுறுவாராக. அவர்பால் இறுதியாக வந்தவரான** இவர், எல்லா நன்மதிப்புக்கும் உரியவர் ஆவாராக; அவரது வதனத்தின் ஒளிகளினால் ஒளிரப்பட்டு, அவர் முன்னால் இவரே சாஷ்டாங்கமாய் வீழ்ந்து, அவர்பால் இவரது கீழ்ப்படிதலுக்குச் சாட்சியங் கூறியதைத் தவிர, இவரது வருகை அவரது வருகை போன்றே இருந்தது. இவர்** மீதான உமது வெளிப்பாடும் அவர்மீதான*** உமது வெளிப்பாட்டைப் போன்றே இருந்தது. அவரது பாதையில் உயிர்த் தியாகம் செய்தோர் மீதும், அவரது அழகின் மீது கொண்ட அன்பின் பொருட்டுத் தங்களின் வாழ்க்கைகளை அர்ப்பணித்தோர் மீதும் புகழொளி சேரட்டுமாக.

என் இறைவா, இவர்களே உம்மிலும் உமது அடையாளங்களிலும் நம்பிக்கை வைத்துள்ள ஊழியர்கள் என்பதற்கும் உமது முன்னிலை எனும் புகலிடத்தை நாடி, உமது வதனத்தை நோக்கித்  திரும்பியுள்ளோர் என்பதற்கும், உமது அண்மைய எனும் அரசவையினை நோக்கித் தங்கள் முகங்களைத் திருப்பி, உமது நல்விருப்பம் எனும் பாதையில் நடந்துள்ளோர் என்பதற்கும் உமது விருப்பத்திற்கேற்ப உம்மை வழிபட்டு, உம்மைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் தங்களைப் பற்றறுக்கச் செய்து கொண்டோர் என்பதற்கும், நாங்கள் சாட்சியமளிக்கின்றோம். பிரபுவே, எல்லா வேளைகளிலும்  அவர்களின் ஆவிகள், உடல்கள் ஆகியவற்றிற்குச் சகலத்தையும் சூழவல்ல உமது கருணையின் அற்புதங்களிலிருந்து ஒரு பங்கினை வழங்கிடுவீராக. எவரது உதவி மனிதர் அனைவராலும் வேண்டப்படுகின்றதோ அவரைத் தவிர, எல்லாம் வல்லவரும், சர்வ மகிமையும் வாய்ந்த இறைவன், உம்மையன்றி வேறிலர்.

பிரபுவே, அவர் பெயராலும், அவர்கள் பெயராலும், மேலும் நீர் யாரை உமது சமயமெனும் அரியணையில் அமர்த்தி மண்ணுலக விண்ணுலக வாசிகள் அனைவரையும் புகலிடம் பெறச் செய்தீரோ அவர் பெயராலும், எங்களை, எங்களின் அத்துமீறல்களிலிருந்து தூய்மைப்படுத்துமாறும், உமது முன்னிலையில் உண்மையெனும் இருக்கையினை எங்களுக்காக அருளுமாறும், இவ்வுலகின் துன்பங்களும், அதன் துரதிர்ஷ்டங்களும், உம்மை நோக்கித் திரும்புவதிலிருந்து தடுக்கப்படாதாருடன் நாங்கள் தொடர்புறவுக் கொண்டிடச் செய்திடுமாறும் உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன். மெய்யாகவே, நீரே சர்வ சக்திவாய்ந்தவர், அதி மேன்மை மிக்கவர், பாதுகாப்பாளர், என்றும் மன்னிப்பவர், அதி கருணையாளர்.

 

*முல்லா ஹுசேன் 
**குடூஸ்
***பாப் பெருமானார்

-Bahá'u'lláh
-----------------------

